18 March 2013

நறுமணம் பெற ஒரு மனதாயிருப்போம்



     ஒருநாள் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து வயிற்றோடு சண்டையிட்டன "நீ மட்டும் எந்த வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகிறாய். ஆகவே இனிமேல் நாங்களும் எந்த வேலையும் செய்யபோவதில்லை" என வயிற்றிடம் சொல்லிவிட்டன. அன்று முதல் கால் உணவை தேடி செல்லவில்லை. கை உணவை எடுக்கவில்லை, வாய் சாப்பிடவில்லை. ஆனால் வயிறு இதைகுறித்து கவலைப்படவே இல்லை. நாட்கள் செல்ல செல்ல உடல் உறுப்புகள் எல்லாம் பலம் இழந்து போயின. உண்மையை அறிந்து கொண்ட உறுப்புகள் வயிற்றிடம் வந்து மன்னிப்பு கோரி அன்று முதல் ஒற்றுமையாய் வாழ ஆரம்பித்தன; பழைய வலிமையைவிட பல மடங்கு புது வலிமை பெற்றன.

     நமக்கு ஒரே சாரீரத்திலே அனேக அவயங்கள் இருந்தும் எல்லா அவையங்களும் ஒரே தொழில் இராதது போல், அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சாரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயங்கலகயிருக்கிறோம் (ரோமர் 12: 4,5). ஆதி சபையில், "விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார், ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். வீடுகள் தோறும் அப்பம் சுட்டு விநியோகித்து மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணினார்கள்" என்று வேதம் சொல்லுகிறது.

     இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் ஒற்றுமை வலிமையிழந்து வருகிறது. இப்படி பட்ட சூழ்நிலையில் தேவன் நம்மிடம் எதிபார்ப்பது ஒற்றுமை! நாம் எல்லோரும் ஒவ்வொரு உறுப்பாய் காணப்டுகிறோம். எல்லா உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டல்தானே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக இயங்கும்? பணக்காரநென்றும் ஏழை யொன்றுமில்லை. உயர்ந்தவநென்றும் தாந்தவநென்றும்மில்லை. ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்- ஒரே உடம்பின் பல உறுப்புக்கள் போல. சகோதரரே, நீங்கள் யாவரும் ஒரே காரியத்தை பேசவும் பிரிவினைகளில்லாமால் ஏகமனதும் ஏக யோசனையும் உள்ளவர்களாய். சீர் பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வேண்டி கொள்கிறேன். (2கொரி  13: 11). நீங்களெல்லோரும் ஒருமனப்ட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும் சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும் இணக்கமுள்ளவர்க்களுமாய் இருங்கள்" ( 1 பேதுரு 3: 8)

16 March 2013

இழந்து போனதைத் தேடும் இறைவன்


     இஸ்ரவேல் தேசத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடை பெரும் போது மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டு முத்திரையுடன் கூடிய பத்து வெள்ளி காசுகளை கோர்த்து மணப்பெண்ணின் நெற்றியில் நகையாக அணிவது பாரம்பரிய வழக்கம். இதில் பெரிய விஷேசம் என்னவென்றால் பத்து வெள்ளிகசுகளில் ஒரு காசு தொலைந்து போனாலும் அவள் வாழ்கையில் ஏதாவது அபசகுணம் நடக்கும் என்று கருதி திருமணத்தை நிறுத்தி விடுவார்கள். இந்த மூடநம்பிக்கையின் விளைவால் அப்பெண்ணுக்கு வேறு இடங்களில் திருமணம் நடப்பது கடினம். இதற்கு பொருத்தமான ஒரு உவமையை இயேசு ஜனங்களுக்கு போதித்தார்.

     "ஒரு ஸ்திரீ பத்து வெள்ளி காசை உடையவளயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால் விளக்கை ஏற்றி அந்த ஓளியில், வீட்டை பெருக்கி அதைக் கண்டுபிடிக்கிரவைக்கும் மிகுந்த சிரமத்துடன் தேடாமலிருப்பரோ? கண்டு பிடித்த பின்பு, தன் சிநேகதிகளிடமும், அயல் வீட்டுகாரிகளிடமும் காணாமல்போன வெளிக்காசை கண்டுபிடித்தேன்; என்னோடு சேர்ந்து சந்தோசப்படுங்கள்' என்பாள் அல்லவா?.

     அதுபோல மனம்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாக சந்தோசமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்கு சொல்லுகிறேன்" (லூக்க 15: 8-10).

     காணாமல் போன வெள்ளிக் காசை அந்த பெண் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் மிக உன்னிப்பாக தேடுகிறாள். அவளுடைய எண்ணம் முழுவதும் அந்த வெள்ளிக்காசை கண்டுபிடிப்பதிலேயே இருக்கும். அதுபோலவே இயேசு கிறிஸ்துவின் இருதயம் முழுவதும், தம்மை விட்டு பின்வாங்கி போன ஆத்துமாக்களை குறித்தே விசனப்படுகிறது. ஒரு பாவி மனம்திருமும்போது அவர் இருதயம் சந்தோசத்தால் நிறைகிறது. ஒரு தேசம் இரட்சிக்கப்படும்போது, ஒரு பாவி இரட்சிக்கப்படும்போதும், தேவனுடைய கிருபை அதிகமாய் வெளிப்படும். மனுஷனுடைய இரட்சிப்பு தேவ தூதருக்கு முன்பாக சந்தோஷமான காரியம். தேவ தூதர்கள் மகிழ்ச்சியில், "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக" என்று சந்தோசத்தோடு துதித்து பாடுவார்கள் (லூக்கா 2:14).


      

11 February 2013

தேவன் விரும்பும் காதல்



    உன் தேவனாகிய கர்த்தரை காதலிக்கலாம் ( உபா 6:5, 10:12)
கணவனை காதலிக்கலாம் நீதி 2:4 மனைவியை காதலிக்கலாம் ஆதி 24:67, தன் பிள்ளைகளை காதலிக்கலாம் நீதி 2:4. வேதாகமம் கூறுகிற இவற்றை விட்டு வேதாகமம் அனுமதிக்காத ஒரு நபரை நாம் காதலிக்கலாமா? ஸ்திரிகளை சகோதிரிகளை போலவே பாவிக்க வேண்டுமென்று வேதம் கூறுகிறது. எல்லாரையும் கிறிஸ்துவுக்குள் சகோதர சகோதியாய் பார்க்க பிரயாசப்படுங்கள் .
   
    "அன்றியும் பாலியத்துகுரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி சுத்த இருதயத்தோடு கர்த்தரைத் தொழுதுகொல்லுகிரவர்க்ளுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும் படி நாடு (II தீமோ   2:22). 

03 February 2013

இச்சையான பார்வையும் ஒரு பாவமே




    இஸ்ரவேல் ஜனங்களுக்கு மோசே என்ற தம் பக்தன் மூலம் 10 கட்டளைகள் தேவன் கொடுத்தார். அக்கட்டளைகளில் ஒன்று விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது விபச்சாரம் செய்யதிருப்பயாக என்ற வார்த்தை வேதாகமத்தில் யாத் 20: 14, உபா 5:27, மத் 5:27, மத் 19:18,  ரோமர் 13:9, ஆகிய வசனங்களில் விவரிக்கப்பட்டிருக்கிறது. விபச்சாரம் பண்ணுகிறவன் மதி கேட்டவன். அப்படி செய்கிறவன் தன் ஆத்துமாவை கேடுத்து போடுகிறான் நீதி 6:32 வேதம் கூறுகிறது. மேலும் 1 கொரிந்தியர் 6:9,10 வசனங்களில் வேசி மர்கத்தாரும், விபச்சரகரரும், சுயபுனர்சிகாரரும் ஆண் புனர்சிகாரருமே  தேவனுடைய ராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை என்று காணப்படுகிறது. தன் மனைவியை தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால் அவன் விபச்சரக்காரன் என்று இயேசு சொன்னார் என்பதை மத் 19:9, லூக்கா 18:20 போன்ற வசனங்களில் வாசிக்கலாம். மேலும் எது விபச்சாரம் என்பதையும் இயேசு கிறிஸ்து தெளிவாய் விளக்கியுள்ளார். "நான் உங்களுக்குச் சொல்கிறேன் ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபச்சாரம் செய்தாயிற்று" (  மத் 5:28 ).

    இக் கலக்கட்டத்தில் உலகெங்கும் விபச்சாரம், வேசித்தனம் தலைவிரித்தடுகிறது. ஒவொரு நாளும் பாலியல் வன்கொடுமை செய்திகளை கேள்விபடுகிறோம். பெரு நகர எல்லைகளில் விபச்சரகரர்களின் வாடிக்கையாளர்கள் கூட்டம் பெருகி கொண்டிருக்கிறது. "விபச்சரியானவள்அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்" ( நீதி 6:26) வேதம் கூறுகிறது. பழைய ஏற்பாட்டு காலங்களில் விபச்சாரம் செய்தால் தான் பாவம் என்று இருந்தது. ஆனால் புதிய ஏற்பாட்டு காலத்திலோ அப்படியல்ல. ஒரு ஆணையோ, பெண்ணையோ இச்சையோடு பார்த்தாலே அது பாவமாக கருதப்படும் சுய ஒழுக்கம் குன்றி, பிறன் மனை நோக்குவோர், பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர், அக் குற்றம் செய்யும் முன் சிந்திப்பதில்லை; செய்தபின் மனம் வருந்தியும் எந்த பயனும்மில்லை; விலை மதிக்க முடியாத நஷ்டத்தை ஏற்படுத்தியாகிவிட்டது; அதற்கப்புறம் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது. அந்த புலம்பலும் போலியோ என்றே எண்ணத் தோன்றுகிறது அல்லவா? அப்படிப்பட்ட பாவத்தில் விழுந்து தவித்து கொண்டிருப்போருக்கு தேவன் தரும் ஆலோசனை "வேதமே வெளிச்சம். போதக சிட்சையே ஜீவ வழி. அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும் இச்சகம் பேசும் நாவுடைய பரஸ்திரிக்கும் விலக்கி காக்கும் ( நீதி 6:23,24) இந்த வசனத்தில் 'ஸ்திரி என்னும் வரும் இடங்களில் 'ஆண் ' என்று சேர்த்துகொள்ளலாம். 
    விபச்சாரத்தில் ஈடுபடுவோருக்கு அரசு எப்படிப்பட்ட தண்டனை வழங்கினாலும் பரலோக அரசின் தண்டனைக்கு முன் இவை சதரனமனவையே. "விபச்சாரகாரன் வாதையையும், இலச்சையையும் அடைவான் அவன் நிந்தை ஒழியாது" (நீதி 6:33) என்று வேதம் கூறுகிறது. விபச்சாரம் செய்வது மட்டுமல்ல. இச்சையான பார்வையும் விபசார பாவமே.         



26 January 2013

தேவனின் கரம் அரவணைக்கட்டும்



    வேதாகமத்தில் முதல் நாளாகமம்  4: 9,10 வசனங்களில் யாபேஸ் என்னும் ஒரு மனிதனை குறித்து அறிய முடிகிறது. இவனை இவன் தாய் துக்கத்தோடே பெற்றேன் என்று சொல்லி யாபேஸ் என்று பெயரிட்டாள். யாபேசின் வாழ்க்கையில் எங்கும் துக்கம். இந்த சூழ்நிலையில் அவன் தேவனை நோக்கி " தேவரீர் என்னை ஆசிர்வத்தித்து, என் எல்லையை பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்ததபடிக்கு அதற்கு என்னை விலக்கி காத்தருளும்" என்று வேண்டிகொண்டான். அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

    யாபேஸ் உபத்திரவத்தின் மத்தியிலும் வேதனை மத்தியிலும் மனிதர்களை நோக்கி அவன் இறைஞ்சவில்லை; உதவி கோரவில்லை ; எதிபர்க்க்கவுமில்லை. மாறாக அவன் தேவனை நோக்கி பார்த்தான். அவரே தனக்குச் சரியான வழிகாட்டி, நல்மேய்ப்பர் என்பதை அவன் பரிபூரனமாக உணர்ந்திருந்தான். நம்முடைய வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாளும் நாம் அந்த பிரச்சனையை பார்க்கமால், அந்த பிரச்சனையை களையவல்ல தேவனை நோக்கிதான் பார்க்கவேண்டும். யாபேஸ் " தேவரீர் என்னை ஆசிவதியும்" என்று கேட்டான். இன்றைக்கு ஆநேகர், துரதிருஷ்ட வசமாக, மனிதர்களிடத்தில் ஆசீர்வாதத்தை தேடுகின்றனர். உண்மையான ஆசிர்வாதம் தேவனிடம் உள்ளது என்பதை எளிதாக மறந்து விடுகிறார்கள்.

    யாபேஸ் " என் எல்லையை பெரிதாக்கும்" என்று வேண்டினான். நம் வாழ்க்கையில் தொழிலில், குடும்பத்தில் எல்லையும் பெரிதாக, விரிவடைய, நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். " உமது கரம் என்னோடு இருக்க வேண்டும்" என்று கேட்டான். பொல்லாதவர்கள் நிறைந்த இவுலகில் நமக்கு பாதுகாப்பு தேவனுடைய கரம் மாத்திரமே. ஆகவே நாம் தேவனுடைய கரத்தினை, அதன் ஆறுதலான அரவணைப்பினை மட்டுமே கோர வேண்டும். மேலும் யாபேஸ் " தீங்கு என்னை துக்கப்படுத்தபடிக்கு அதிலிருந்து விலக்கி என்னை காத்தருளும்" என்று ஜெபித்தான். நம்மை சுற்றிலும் விபத்துக்கள், ஆபத்துக்கள், துரோகங்கள், தீவினைகள், சுழ்ல்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நாம் தேவனை நோக்கி " தேவரீர் எந்த தீங்கும் என்னை துக்கப்படுத்ததபடிக்கு காத்து அருளும்" என்று ஜெபிக்க வேண்டும். யாபே வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். நம்முடைய தேவன் ஜெபத்தை கேட்கிறவர். சரியான, உரிய பதிலைக் கொடுக்கிறவர். ஆகவே யாபேசை போல ஜெயிப்போம். தேவ பதிலை பெறுவோம்


05 January 2013

சமாதானத்தின் தேவன்



     ரோம் பேரரசில் யானஸ் என்னும் தெய்வத்திற்கு ஒரு பெரிய ஆலயம் கட்டப்பட்டிருந்தது. ரோம் வீரர்கள் யுத்தத்திற்கு செல்லும் முன்பு இங்கு வந்து வழிபடுவார்கள். காரணம், யானஸ் யுத்தத்தில் வெற்றியை அருளும் தெய்வமாக அங்கே நம்பப்பட்டு வந்தது. இயேசு பிறப்பதற்கு முன்பு, சமாதானத்தின் தூதுவன் வர போகிறான் என்பதை அறிவுறுத்தும் அறிகுறியாகவோ என்னவோ, ரோம் நகரம் பரவலாக அமைதி நிலவியிருந்தது ; யுத்தம் நடைபெறவில்லை. அதனால் யானஸ் ஆலயத்திலும் வழிபாடுகள் நடைபெறுவதில்லை ஆலயமும் அடைக்கப்பட்டது. அவ்வாறு அடைக்கப்பட்ட அந்த ஆலயம், பிறகு திறக்கப்படவேயில்லை என்று சரித்திர ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். காரணம் இது தான் இயேசு கிறிஸ்து அப்போது சமாதான பிரபுவாய் பூமியில் அவதரித்தார். சமாதான பிரபு நம்மோடு இருக்கும்போது யானஸ் என்னும் யுத்த தெய்வத்திற்கு வேலையே இல்லையே.
    


    நம்முடைய வாழ்கை, குடும்பம், கிராமம் பட்டணம் எங்கும் அமைதியின்றி, சண்டையும் சச்சரவுமாக காணப்படுகிறது. இன்று பெரும்பாலோரின் தனிப்பட்ட வாழ்கையில் மனப்போரட்டம் குழப்பம், ஒற்றுமைஇன்மை, போட்டி, பொறாமைதான் நிலவுகின்றன. இந்த நிலைமைகள் மாரத்தான் "உங்களுக்காக இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பிறந்திருக்கிறார், அவருடைய நாமம் சமாதான பிரபு" (ஏசாயா 36: 6) 

    உண்மையான சமாதனம் தேவனிடமிருந்தே வருகிறது என்று டாக்டர் ஸ்டன்லி ஹார்டன் கூறுகிறார். இதை சங் 119: 165ஆம் வசனம் நிருபித்து காட்டுகிறது. சமாதனம் என்னும் வார்த்தை பாதுகாப்பையும் (சங் 4: 8), திருப்தியையும் (ஏசா 26: 3), செழிப்பையும் (சங் 122: 6-7), யுத்தமில்லாத அமைதியையும் (1சாமு 7: 14), குறிக்கும். யூதர்கள் ஒருவரை ஒருவர் வாழ்த்தும்போது சாலோம் (சமாதனம்) என்று கூறுவார்கள். 

     "நாம் விசுவாத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால். நம்முடைய கர்த்தராகிய ஏசுகிறிஸ்து  மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்" (ரோமர் 5 : 1) என்று வேத வசனம் கூறுகிறது.  





















02 December 2012

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்!


     ஒரு சிறந்த ஓவியர் இயேசுவின் கடைசி விருந்து காட்சியை வரைய ஆரம்பித்தார்.12 சீடர்களையும் மிக நேர்த்தியாகவும் தத்ருபமகவும் வரைந்தார். அதிலும் யூதாஸ் முகம் உண்மையிலே கொடுரமாய் காணப்பட்டது. அனால் ஓவியரால் இயேசுவின் முகத்தை மட்டும் தத்ருபமாக வரைய முடியவில்லை. மிகுந்த கவலையோடு சபை பாதிரியாரை சந்தித்து தன் பிரச்சனையை சொன்னார் 
    அதை கேட்டு புன்னகைத்த பாதிரியார் " இந்த படத்தில் யூதாசை வரையும் பொது, உங்கள் சொந்த எதிரியை மனதில் வைத்து வரைந்திருக்கிரிர்கள் என்று நம்புகிறேன். அதனால்தான் யூதாசின் முகம் இத்தனை தத்ருபமாக அமைந்துள்ளது எந்த உள்ளத்தில் பழி வாங்கும் உணர்ச்சி இருக்கிறதோ, அந்த உள்ளத்தால் இயேசு கிறிஸ்துவின் முகத்தை மனக்கண்ணால் கூட காண முடியாது. அகவே உங்கள் எதிரியை மன்னித்து விடுங்கள். அதன் பின் சாந்த சொருபியான இயேசுவை வரைய முயற்சி செய்யுங்கள் அந்த கருணை பொங்கும் முகம் அற்புதமாக உங்கள் விரல்களால் உருவாகும்" என்றார்.

    அப்படியே தன் எதிரியை மானசீகமாக மன்னித்து, மீண்டும் ஓவியர் வரைந்த போது, இயேசு கிறிஸ்துவின் முகம் உயிர் ததும்பும் பேரொலியோடு கருணை பூவாய் பூத்திருந்தது.

    பழைய ஏற்பாட்டு காலத்தில் எபிரேய ஜனங்கள் பழிக்கு பழி வாங்கினார்கள். அனால் இயேசு கிறிஸ்துவோ நம்முடைய விரோதிகளையும் நாம் சிநேகிக்க வேண்டும் என்று ( லுக் 6 : 27 ) கூறுகிறார். ஒருவர் நமக்கு தீமை செய்யாக்கூடாது. " பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது. நானே பதில் செய்வேன் " என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிற படியால் ( உபா 32: 35 ) நீங்கள் பழி வாங்கமால், கோபாக்கினைக்கு இடங் கொடுங்கள் ( ரோமர் 12: 19 )  என்று வேதம் கூறுகிறது. நாம் கோபப்படுவோமானால் தேவனின் அன்பு முகத்தை தரிசிக்க இயலாது.

    கலாத்தியர்  5: 23ல் காணப்படும் 'சாந்தம்' என்ற சொல், 'பிராவோடேஸ் ' என்னும் கிரேக்க சொல்லின் தமிழக்கமாகும். இது உள்ளான மனப்பாங்கை குறிக்கிறது.இது மனது, இருதயம் ஆகியவற்றின் நிலையை விளக்குகிறது. "இயேசு கிறிஸ்து சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர் ( மத் 11  : 29 ).  சந்தகுனமுள்ளவர்களுக்கு அவர் கொடுக்கும் வெகுமதி, 1,  திருப்தி! ( சங் 25 :26)
2.  நியாயத்திலே நடத்தப்படுதல்  ( சங் 25 : 9 ) 3.  பூமியை சுதந்தரித்தல்  (மத் 5: 5 )
4. இரட்சிப்பு  ( சங் 76 : 9 ) 5. உதவி  ( சங் 147: 6 ) 6. மகழ்ச்சி ( ஏசாயா 29 : 19 ) 7. ஆசிர்வாதம்  ( கலா 6 : 1 ) 8. பொறுமை ( 2 தீமோ 2: 24-25 ) 9. பரிசுத்த ஆவி ( சங் 5 : 22 ) 10.  அறிவு  ( சங் 25: 9 )

    நாம் அனைவருடனும் சாந்த குணத்துடன் பழக வேண்டும்  ( பிலி  4 : 5 )  என்று தேவன் விரும்புகிறார்.