18 November 2012

துயரத்திலிருந்து தூக்கி எடுக்கும் தேவன்


          தாவீது என்னும் பக்தன் பலவிதமான துயரங்களின் நடுவே வாழ்திருந்த  போது கர்த்தரிடத்தில் தன் மனவேதனையை தெரிவித்து விண்ணப்பம் செய்கிறான். அந்த விண்ணப்பத்தை 102 வாசிக்கிறோம். அந்த சங்கீதத்தின் ஆறாவது வசனத்தில் அவன் "வனாந்திர நாரைக்கு ஒப்பனேன்"  என்று சொல்லி புலம்புகின்றான். இந்த வனாந்திர நாரை உருவத்தில் பெரியது, 6  அடி நீளமுள்ளது. இறக்கைகள் விரிக்கும் போது 12 அடி வரை இருக்கும். இது வானத்திலும் பறக்கும் தண்ணீரிலும் நீந்தும். நீங்கள்தான் இவற்றின் பிரதான உணவு நாரையின் அலகின் அடியில் பை போன்ற சவ்வு இருக்கும். இதன் வழியாக தண்ணீரை உறிஞ்சி மீன்களை சேகரித்து தன் கூடுகளுக்கு கொண்டு சென்று தன் குஞ்சுகளுக்கு கொடுக்கும். தாய் பறவை அதிகமான மீன்களை கொத்திக்கொண்டு வரும். இவை அனைத்தையும் குஞ்சிகளால் புசிக்க முடியாது. புசிக்காத மீதமான மீன்கள் கூட்டிலிருந்து கீழே விழுந்துவிடும். கீழே சிதறிய மீன்கள் வெயிலில் காய்ந்து கருவடகப்போயவிடும். பல கூடுகளில் இதுபோன்ற நடை பெறுவதால் அந்த இடமே துர்நாற்றம் வீசும். மனுசர்கள் இந்த துர்நாற்றத்தினால் வனாந்திர நாரையின் கூடுகளுக்கு அருகில்கூட செல்ல மாட்டார்கள்.

             இதை மனதில் கொண்டுதான் தாவீது தன்னை "வனாந்திர நாரைக்கு ஒப்பனேன்" என்று சொல்கிறான். காரணம் தாவீதையும் மற்ற ஜனங்கள் எல்லோரும் வெறுத்தார்கள். ஆறுதல் சொல்ல ஒரு நபர்கூட இல்லை. அந்த நிலையில் அவன் தேவனை நோக்கி பார்த்து விண்ணப்பம் செய்தான். அவன் விண்ணப்பத்தை கேட்டு தாவீதை தேவன் உயர்த்தினார் அவனைத் தேடி பலர் வந்தார்கள். அவன் நறுமணம் வீசுகிரவனாய் மாறினான்.

              இடறு நம்மில் சிலர், பிறரால் ஒதுக்கி வைக்கப்பட்ட சூழ்நிலையில் தனி ஒரு மரமாக நின்று வேதனை பட்டு கொண்டிருக்கலாம். வனாந்திர நாரையை போல, பிறர் நம்மை வெறுத்து தள்ளலாம். இன்று தேவனை நோக்கி விண்ணப்பம் செய்வோம். தாவீதை உயர்த்தினவர் நம்மையும் உயர்த்துவார்