20 October 2012

பாவ வாழ்க்கையை மாற்றும் பரமபிதா

பாவ வாழ்க்கையை மாற்றும் பரமபிதா



          பயணிகள் கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி அநேகர் கடலில் முழ்கி மரணமடைந்திருந்தனர். ஒருவன் எப்படியோ சிரமப்பட்டு நீந்தி ஒரு சிறிய தீவை சென்றடைந்தான். அத் தீவிலுள்ள மக்கள் அவனை மிகுந்த அன்போடு உபசரித்தனர். அத்தீவை சுற்றிபர்த்த அவன், அங்குள்ள மக்கள் இயேசு கிறிஸ்துவை வழிபடுகிறவர்களாக இருப்பதை கண்டான். தான் கடவுள் கடவுள் மறுப்புகாரனாக, நாத்திகனாக இருந்ததால், அவர்களுடைய கடவுள் நம்பிக்கை அவனுக்கு வெருப்புட்டியது. அங்குள்ள மக்களிடம் " உங்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உங்கள் அன்பை என்னால் மறக்க இயலாது. அனால் ஒரே ஒரு காரியம் எனக்கு பிடிக்கவில்லை. நீங்கள் இயேசுவை வழி படுகிறீர்கள் அதை நான் வெறுக்கிறேன்" என்றான்.


           உடனே அத்தீவின் தலைவன், "பத்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இங்கு  வந்தீர்களானால் உங்கள் மீதான எங்கள் பார்வை வேறு மாதிரியாக இருந்திருக்கும். இறை மீது பாயும் மிருகங்களின் இயல்பையே எங்களிடம் பார்த்திருப்பிர்கள்   ஆமாம், நாங்கள் மனிதரை கொன்று தின்னும் நரமாமிச பட்சினிகலகத்தான் பிறந்தோம், வளர்ந்தோம். ஆனால் எங்கள் தீவிற்கு ஒரு ஊழியக்காரர் வந்து தைரியமாக இயேசுவை பற்றி அறிவித்தார். இயேசுவின் அன்பை பரிவுடன் விவரித்தார். நாங்கள் அந்த இயேசுவை ஏற்றுகொண்டோம். அன்று முதல் நாங்கள் மனித மாமிசத்தை புசிக்கும் காட்டு மிரண்டித்தனத்திலிருந்து மாறினோம். நாங்கள் இன்னும் எங்கள் பழைய பாரம்பரியத்தை கைகொண்டவர்களாக இருந்திருந்தால் உங்கள் கதி என்ன என்பதை யோசித்து பாருங்கள் ..." என்று பதிலளித்தார்கள்.

                விபத்தில் முழ்கிய கப்பலிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே நபர் என்ற வகையிலும் அப்படி தப்பிபிழைத்தும் நரமாமிச பட்சினிகளிடம் சிக்காமல், நல்மனதுக்கு மாறிய இந்த நல்லவர்களின் அன்புக்குப் பாத்திரமானதும் இறைவன் அருளாலேயே என்பதை அவன் புரிந்துகொண்டான். இயேசுவின் தியாக அன்பு, அம்மக்களின் பாரம்பரிய கொடூர குணத்தையே மற்றிருப்பதுதான் எவ்வளவு ஆச்சரியம்!

                "நிறைவானது வரும் போது குறைவானது ஒழிந்துபோம்" ( ௧ கொரி 13 :10 ) என்று வேத வசனம் கூறுகிறது மேலும் " ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புது சிருஷ்டியாய் இருக்கிறான் பழையவை எல்லாம் ஒழிந்து போயின எல்லாம் புதியதாயின. இவையெல்லாம் தேவனாலே உண்டாயிருக்கிறது " ( 1 கொரி 5: 15-16 ) என்ற அப்போஸ்தலனாகிய பவுல் கொரிந்து சபைக்கு எழுதினார். 

                 யாருக்குல்ளெல்லாம் நிறைவான தேவனும் வருகிறாரோ, உடனே அவர்களின் பாவ வாழ்கை மாறிப் போகிறது. பாவ வாழ்க்கையை மாற்றும் வல்லமை இயேசுகிறிஸ்துவுக்கு உண்டு என்பதை வேதம் தெளிவாய் போதிக்கிறது  " தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவற்றை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இறக்கம் பெறுவான் " ( நீதி 28: 13 ) தேவனிடத்தில் இறக்கம் பெறும்போது தேவன் உங்களுக்கு கொடுக்கும் நல் வார்த்தை இதோ " முந்தினவற்றை நினைக்க வேண்டாம் பூர்வமானவற்றைச் சிந்திக்க வேண்டாம். இதோ, நான் புதிய காரியத்தை செய்கிறேன். இப்போதே அது தோன்றும் " (எசாயா 43 : 18-19 )
    

 

13 October 2012

பொறாமை என்னும் பிசாசு

பொறாமை என்னும் பிசாசு 


             கிரேக்க நாட்டில் தியாஜீன்ஸ் என்ற பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரன் இருந்தான். "மல்யுத்த இளவரசர்" என்ற சிறப்புப் பட்டமும் அவனுக்கு கொடுக்கப்பட்டது. இன்னொரு மல்யுத்த வீரனுக்கு தியாஜீன்ஸ் மீது மிகுந்த பொறமை. திடிரென்று ஒருநாள் தியஜீன்ஸ் மரணமடைந்தான். அப்படியுருந்தும் அவன் குறையவில்லை. ஏனெனில் அந்த ஊர் மக்கள், உயிரோட்டமிக்க தியாஜீனஸின் மிகப்பெரிய சிலையை செய்து பொது இடத்தில் வைத்தார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் பொறாமைக்கரனுக்கு மேலும் பற்றி கொண்டு வரும். அகவே ஒவொரு நாளும் இரவு வேளையில் அவனது ஆத்திரம் தீர அந்த சிலையோடு மல்யுத்தம் செய்வான். எதிர்த் தாக்குதல் இல்லாததால், தானே ஒவ்வொரு முறையும் வெற்றி பெருவதாகிய கற்பனையில் அவன் மகிழ்வான். அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. ஒருநாள் அவ்வாறு மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அந்த சிலை உடைந்து அவன் மீது விழுந்து அவனை நசுக்கி, அவனுக்கு மரணம் சம்பவிக்கச் செய்தது. அவனுடைய பொறாமைக்கு கிடைத்த சம்பளம் மரணமாகி விட்டது. 

               பதான் அராமில் கி.மு. 1746ல் யாக்கோபு ராகேல் பெற்ற குமாரர்களில் யோசேப்பு மூத்தவன். இவனுடைய  நல்ல குணங்கள் காரணமாக, தந்தை யாக்கோபு,  இவன் மேல் மிக அன்பாய் இருந்தான். இதனால் அவனுடைய சகோதரர்கள் இவன் மேல் பொறாமை கொண்டு தோந்தான் நாட்டிலிருந்து வந்த இஸ்ரவேல் வியாபாரிகளுக்கு அவனை விற்று விட்டார்கள். அந்த வியாபாரிகளோ, யோசேப்பை எகிப்தின் பிரதானியான போத்திபாரிடம் விற்றார்கள். யோசேப்பின் சகோதரர்களுடைய பொறாமை, யோசெப்பைதான் எவ்வளவு துன்புறுத்திவிட்டது! ஆனாலும் கர்த்தர் இருந்தார். அதனால் அவன் எகிப்து தேசத்தின் அதிகாரியாய் அனான்.

                பஞ்ச காலம் வந்த போது கானான் தேசத்திலிருந்து தானியம் பெற எகிப்திற்கு யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள். அங்கே யோசேப்பு அதிகாரியாய் இருந்ததை கண்டு தலைகுனிந்தனர். யோசேப்போ அவர்களை எதிர்க்கவில்லை தன்  சகோதரர்களையும், தன் தகப்பனையும் பார்வோனின் அனுமதியுடன் எகிப்தில் ராமசேஸ் என்கிற இடத்தில் குடியமர்த்தி, சுதந்திரம் கொடுத்து ஆதரித்தான்.
  
                பிறரிடம் நல்ல குணங்கள் அல்லது சம்பத்துக்கள் இருப்பதை கண்டு ஒருவர் தன் உள்ளத்தில் எரிச்சலடைந்து அந்த நபர் மீது பொறாமைபடுகிறார். இது இயற்கையான மனித சுபாவம்தான். ஆனாலும் ஒவொருத்தரும் பொறமை என்னும் பாவகுணத்திற்கு எதிராக தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார் "சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன். பொறமையோ எலும்புருக்கி" - ( நீதி 14 : 30 )
                                                                                                                                  நன்றி தினகரன் 

                 

05 October 2012

பிறருக்கானவற்றையும் நோக்குவோமாக!

பிறருக்கானவற்றையும் நோக்குவோமாக!


                                                                     டாக்டர் ஜான் 
               ஐடா ஸ்கடர், 20 வயது பெண் 1890ம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி, தன தன் தயார் சுகவீனம் அடைந்த செய்தி கேள்விப்பட்டு அமெரிக்கவிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தாள.திண்டிவனத்தில் இவருடைய பெற்றோர் மிஷனரிகளாக பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் சொகுசு வாழ்கை இந்தியாவில் ஐடா ஸ்கடருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் 1892ம் ஆண்டு வேலூருக்கு மாருதலானார்கள்.

             அங்கு ஒரு இரவில், ஓர் இளம் மனிதன் இவர்களது வீட்டு கதவருகில் நின்று, பிள்ளை பேற்றினால் மரித்துகொண்டிருக்கும் தனது 14 வயது மனைவிக்கு உதவுமாறு ஐடாவை கேட்டுகொண்டார். ஐடா, தன் தகப்பனாரான டாக்டர் ஜான் அவர்களை அழைத்து செல்லுமாறு தெரிவித்தாள். அவனோ ஒரு ஆண் டாக்டர் தன் மனைவிக்கு உதவி செய்ய நான் அனுமதிக்க மாட்டேன் என்று கூறிவிட்டு போய்விட்டான்.

             இதேபோல் வேறு இருவர் தம்மனைவியர் பிரசவத்துக்கு உதவுமாறு கேட்க, ஐடா தன் தந்தையை சிபாரிசு செய்ய அவர்கள் மறுத்து, மனகசப்புடன் போனார்கள். அவர்கள் மூவரும் ஐடாவின் மனதைப் பெரிதும் பாதித்தனர். மறுநாள் வீட்டின் ஜன்னல் வழியே ஒரு இறுதி ஊர்வலம் போவதைப் பார்த்தாள். தன்னிடம் உதவி கேட்டவர்களின் மனைவியர் மறித்தனர் என்று அறிந்துகொண்டாள். இந்தியாவில் ஒரு பெண் மருத்துவர் கூட இல்லையே 
என  வேதையுற்று, முகம் குப்புற கட்டிலில் விழுந்து அழுதால். பின்பு தன் பெற்றோரின் அனுமதியோடு அமெரிக்கா சென்று பிலடெல்பியாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்று தேவ தரிசனத்தோடு ஒரு மருத்துவராக வேலூர் வந்தால். சிறிது நாளில் தகப்பானார் மரித்துவிட்டார். ஆனாலும் தனது வீட்டின் கிழ் தளத்தில் 10க்கு 12 அடி அறையை திறந்து கிளினிக் ஆரம்பித்தாள். ஆரம்ப நாட்களில் பல பாடுகளை ஐடா ஏற்றுகொள்ள வேண்டிருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவளது சேவை வளர்ந்து பெருகியது. 1968 மே மாதம் தன்  90ம் வயதில் திருப்தியாக ஆண்டவருக்கு வேலை செய்துவிட்டு இறுதி மூச்சை விட்டாள்.

             தற்போது இந்த மருத்துவமனை 1300 படுக்கை வசதி கொண்டுள்ளது  14 அறுவை சிகிச்சை தியேட்டரும் ஷெல் கண் மருத்துவமனையும் பல்வேறு பயிற்சி மையங்களும் இருக்கின்றன! இது தான் கிறிஸ்துவின் சிந்தை. நம் நாட்டில் மனம் போன போக்கில் போய்கொண்டிருக்கும் ஜனங்களுக்கு உதவி செய்யும் மனப்பாங்கு நம்மிடம் உள்ளதா?.

   "அவனவன் தனக்கானவற்றையல்ல, பிறருக்கானவற்றையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது" (பிலி  2: 4-5)