18 March 2013

நறுமணம் பெற ஒரு மனதாயிருப்போம்



     ஒருநாள் உடல் உறுப்புகள் எல்லாம் சேர்ந்து வயிற்றோடு சண்டையிட்டன "நீ மட்டும் எந்த வேலையும் செய்யாமல் மூன்று வேளையும் நன்றாக சாப்பிடுகிறாய். ஆகவே இனிமேல் நாங்களும் எந்த வேலையும் செய்யபோவதில்லை" என வயிற்றிடம் சொல்லிவிட்டன. அன்று முதல் கால் உணவை தேடி செல்லவில்லை. கை உணவை எடுக்கவில்லை, வாய் சாப்பிடவில்லை. ஆனால் வயிறு இதைகுறித்து கவலைப்படவே இல்லை. நாட்கள் செல்ல செல்ல உடல் உறுப்புகள் எல்லாம் பலம் இழந்து போயின. உண்மையை அறிந்து கொண்ட உறுப்புகள் வயிற்றிடம் வந்து மன்னிப்பு கோரி அன்று முதல் ஒற்றுமையாய் வாழ ஆரம்பித்தன; பழைய வலிமையைவிட பல மடங்கு புது வலிமை பெற்றன.

     நமக்கு ஒரே சாரீரத்திலே அனேக அவயங்கள் இருந்தும் எல்லா அவையங்களும் ஒரே தொழில் இராதது போல், அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சாரீரமாயிருக்க, ஒருவருக்கொருவர் அவயங்கலகயிருக்கிறோம் (ரோமர் 12: 4,5). ஆதி சபையில், "விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார், ஒரே இருதயமும் ஒரே மனமுள்ளவர்களாக இருந்தார்கள். வீடுகள் தோறும் அப்பம் சுட்டு விநியோகித்து மகிழ்ச்சியோடும் கபடமில்லாத இருதயத்தோடும் போஜனம் பண்ணினார்கள்" என்று வேதம் சொல்லுகிறது.

     இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் ஒற்றுமை வலிமையிழந்து வருகிறது. இப்படி பட்ட சூழ்நிலையில் தேவன் நம்மிடம் எதிபார்ப்பது ஒற்றுமை! நாம் எல்லோரும் ஒவ்வொரு உறுப்பாய் காணப்டுகிறோம். எல்லா உறுப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டல்தானே ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமாக இயங்கும்? பணக்காரநென்றும் ஏழை யொன்றுமில்லை. உயர்ந்தவநென்றும் தாந்தவநென்றும்மில்லை. ஆணென்றும் பெண்ணென்றும் வித்தியாசமில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் ஒன்றாயிருக்கிறோம்- ஒரே உடம்பின் பல உறுப்புக்கள் போல. சகோதரரே, நீங்கள் யாவரும் ஒரே காரியத்தை பேசவும் பிரிவினைகளில்லாமால் ஏகமனதும் ஏக யோசனையும் உள்ளவர்களாய். சீர் பொருந்தியிருக்கவும் வேண்டுமென்று நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே உங்களை வேண்டி கொள்கிறேன். (2கொரி  13: 11). நீங்களெல்லோரும் ஒருமனப்ட்டவர்களும் இரக்கமுள்ளவர்களும் சகோதர சிநேகமுள்ளவர்களும் மன உருக்கமுள்ளவர்களும் இணக்கமுள்ளவர்க்களுமாய் இருங்கள்" ( 1 பேதுரு 3: 8)

16 March 2013

இழந்து போனதைத் தேடும் இறைவன்


     இஸ்ரவேல் தேசத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடை பெரும் போது மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டு முத்திரையுடன் கூடிய பத்து வெள்ளி காசுகளை கோர்த்து மணப்பெண்ணின் நெற்றியில் நகையாக அணிவது பாரம்பரிய வழக்கம். இதில் பெரிய விஷேசம் என்னவென்றால் பத்து வெள்ளிகசுகளில் ஒரு காசு தொலைந்து போனாலும் அவள் வாழ்கையில் ஏதாவது அபசகுணம் நடக்கும் என்று கருதி திருமணத்தை நிறுத்தி விடுவார்கள். இந்த மூடநம்பிக்கையின் விளைவால் அப்பெண்ணுக்கு வேறு இடங்களில் திருமணம் நடப்பது கடினம். இதற்கு பொருத்தமான ஒரு உவமையை இயேசு ஜனங்களுக்கு போதித்தார்.

     "ஒரு ஸ்திரீ பத்து வெள்ளி காசை உடையவளயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால் விளக்கை ஏற்றி அந்த ஓளியில், வீட்டை பெருக்கி அதைக் கண்டுபிடிக்கிரவைக்கும் மிகுந்த சிரமத்துடன் தேடாமலிருப்பரோ? கண்டு பிடித்த பின்பு, தன் சிநேகதிகளிடமும், அயல் வீட்டுகாரிகளிடமும் காணாமல்போன வெளிக்காசை கண்டுபிடித்தேன்; என்னோடு சேர்ந்து சந்தோசப்படுங்கள்' என்பாள் அல்லவா?.

     அதுபோல மனம்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாக சந்தோசமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்கு சொல்லுகிறேன்" (லூக்க 15: 8-10).

     காணாமல் போன வெள்ளிக் காசை அந்த பெண் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் மிக உன்னிப்பாக தேடுகிறாள். அவளுடைய எண்ணம் முழுவதும் அந்த வெள்ளிக்காசை கண்டுபிடிப்பதிலேயே இருக்கும். அதுபோலவே இயேசு கிறிஸ்துவின் இருதயம் முழுவதும், தம்மை விட்டு பின்வாங்கி போன ஆத்துமாக்களை குறித்தே விசனப்படுகிறது. ஒரு பாவி மனம்திருமும்போது அவர் இருதயம் சந்தோசத்தால் நிறைகிறது. ஒரு தேசம் இரட்சிக்கப்படும்போது, ஒரு பாவி இரட்சிக்கப்படும்போதும், தேவனுடைய கிருபை அதிகமாய் வெளிப்படும். மனுஷனுடைய இரட்சிப்பு தேவ தூதருக்கு முன்பாக சந்தோஷமான காரியம். தேவ தூதர்கள் மகிழ்ச்சியில், "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக" என்று சந்தோசத்தோடு துதித்து பாடுவார்கள் (லூக்கா 2:14).