16 March 2013

இழந்து போனதைத் தேடும் இறைவன்


     இஸ்ரவேல் தேசத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடை பெரும் போது மாப்பிள்ளை வீட்டார் தங்கள் வீட்டு முத்திரையுடன் கூடிய பத்து வெள்ளி காசுகளை கோர்த்து மணப்பெண்ணின் நெற்றியில் நகையாக அணிவது பாரம்பரிய வழக்கம். இதில் பெரிய விஷேசம் என்னவென்றால் பத்து வெள்ளிகசுகளில் ஒரு காசு தொலைந்து போனாலும் அவள் வாழ்கையில் ஏதாவது அபசகுணம் நடக்கும் என்று கருதி திருமணத்தை நிறுத்தி விடுவார்கள். இந்த மூடநம்பிக்கையின் விளைவால் அப்பெண்ணுக்கு வேறு இடங்களில் திருமணம் நடப்பது கடினம். இதற்கு பொருத்தமான ஒரு உவமையை இயேசு ஜனங்களுக்கு போதித்தார்.

     "ஒரு ஸ்திரீ பத்து வெள்ளி காசை உடையவளயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால் விளக்கை ஏற்றி அந்த ஓளியில், வீட்டை பெருக்கி அதைக் கண்டுபிடிக்கிரவைக்கும் மிகுந்த சிரமத்துடன் தேடாமலிருப்பரோ? கண்டு பிடித்த பின்பு, தன் சிநேகதிகளிடமும், அயல் வீட்டுகாரிகளிடமும் காணாமல்போன வெளிக்காசை கண்டுபிடித்தேன்; என்னோடு சேர்ந்து சந்தோசப்படுங்கள்' என்பாள் அல்லவா?.

     அதுபோல மனம்திரும்புகிற ஒரே பாவியின் நிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாக சந்தோசமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்கு சொல்லுகிறேன்" (லூக்க 15: 8-10).

     காணாமல் போன வெள்ளிக் காசை அந்த பெண் மிகுந்த அக்கறையுடனும் பொறுப்புணர்வுடனும் மிக உன்னிப்பாக தேடுகிறாள். அவளுடைய எண்ணம் முழுவதும் அந்த வெள்ளிக்காசை கண்டுபிடிப்பதிலேயே இருக்கும். அதுபோலவே இயேசு கிறிஸ்துவின் இருதயம் முழுவதும், தம்மை விட்டு பின்வாங்கி போன ஆத்துமாக்களை குறித்தே விசனப்படுகிறது. ஒரு பாவி மனம்திருமும்போது அவர் இருதயம் சந்தோசத்தால் நிறைகிறது. ஒரு தேசம் இரட்சிக்கப்படும்போது, ஒரு பாவி இரட்சிக்கப்படும்போதும், தேவனுடைய கிருபை அதிகமாய் வெளிப்படும். மனுஷனுடைய இரட்சிப்பு தேவ தூதருக்கு முன்பாக சந்தோஷமான காரியம். தேவ தூதர்கள் மகிழ்ச்சியில், "உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமை உண்டாவதாக" என்று சந்தோசத்தோடு துதித்து பாடுவார்கள் (லூக்கா 2:14).


      

1 comment: