26 January 2013

தேவனின் கரம் அரவணைக்கட்டும்



    வேதாகமத்தில் முதல் நாளாகமம்  4: 9,10 வசனங்களில் யாபேஸ் என்னும் ஒரு மனிதனை குறித்து அறிய முடிகிறது. இவனை இவன் தாய் துக்கத்தோடே பெற்றேன் என்று சொல்லி யாபேஸ் என்று பெயரிட்டாள். யாபேசின் வாழ்க்கையில் எங்கும் துக்கம். இந்த சூழ்நிலையில் அவன் தேவனை நோக்கி " தேவரீர் என்னை ஆசிர்வத்தித்து, என் எல்லையை பெரிதாக்கி, உமது கரம் என்னோடிருந்து, தீங்கு என்னை துக்கப்படுத்ததபடிக்கு அதற்கு என்னை விலக்கி காத்தருளும்" என்று வேண்டிகொண்டான். அவன் வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார் என்று வேதாகமத்தில் வாசிக்கிறோம்.

    யாபேஸ் உபத்திரவத்தின் மத்தியிலும் வேதனை மத்தியிலும் மனிதர்களை நோக்கி அவன் இறைஞ்சவில்லை; உதவி கோரவில்லை ; எதிபர்க்க்கவுமில்லை. மாறாக அவன் தேவனை நோக்கி பார்த்தான். அவரே தனக்குச் சரியான வழிகாட்டி, நல்மேய்ப்பர் என்பதை அவன் பரிபூரனமாக உணர்ந்திருந்தான். நம்முடைய வாழ்வில் எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாளும் நாம் அந்த பிரச்சனையை பார்க்கமால், அந்த பிரச்சனையை களையவல்ல தேவனை நோக்கிதான் பார்க்கவேண்டும். யாபேஸ் " தேவரீர் என்னை ஆசிவதியும்" என்று கேட்டான். இன்றைக்கு ஆநேகர், துரதிருஷ்ட வசமாக, மனிதர்களிடத்தில் ஆசீர்வாதத்தை தேடுகின்றனர். உண்மையான ஆசிர்வாதம் தேவனிடம் உள்ளது என்பதை எளிதாக மறந்து விடுகிறார்கள்.

    யாபேஸ் " என் எல்லையை பெரிதாக்கும்" என்று வேண்டினான். நம் வாழ்க்கையில் தொழிலில், குடும்பத்தில் எல்லையும் பெரிதாக, விரிவடைய, நாம் தேவனையே சார்ந்திருக்க வேண்டும். " உமது கரம் என்னோடு இருக்க வேண்டும்" என்று கேட்டான். பொல்லாதவர்கள் நிறைந்த இவுலகில் நமக்கு பாதுகாப்பு தேவனுடைய கரம் மாத்திரமே. ஆகவே நாம் தேவனுடைய கரத்தினை, அதன் ஆறுதலான அரவணைப்பினை மட்டுமே கோர வேண்டும். மேலும் யாபேஸ் " தீங்கு என்னை துக்கப்படுத்தபடிக்கு அதிலிருந்து விலக்கி என்னை காத்தருளும்" என்று ஜெபித்தான். நம்மை சுற்றிலும் விபத்துக்கள், ஆபத்துக்கள், துரோகங்கள், தீவினைகள், சுழ்ல்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் நாம் தேவனை நோக்கி " தேவரீர் எந்த தீங்கும் என்னை துக்கப்படுத்ததபடிக்கு காத்து அருளும்" என்று ஜெபிக்க வேண்டும். யாபே வேண்டிக்கொண்டதை தேவன் அருளினார். நம்முடைய தேவன் ஜெபத்தை கேட்கிறவர். சரியான, உரிய பதிலைக் கொடுக்கிறவர். ஆகவே யாபேசை போல ஜெயிப்போம். தேவ பதிலை பெறுவோம்


No comments:

Post a Comment