இஸ்ரவேலருக்கும் எமோரியரின் ராஜாக்களுக்கும் யுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, அவர்கள் எமோரியரை இஸ்ரவேலரின் கைகளில் ஒப்புக்கொடுத்தர்கள். ஒப்புகொடுக்கும் அந்த நாளில் யோசுவா, கர்த்தரை நோக்கி பேசி, பின்பு அவரது கட்டளையால் சூரிய சந்திரனுக்கும் தத்தம் இடத்தில் தரித்து நிற்கும்படி ஆணையிட்டார். "சூரியனே, நீ கிபியோன் மேலும், சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நில்லுங்கள். உங்கள் ஒளியினால் நாங்கள் எதிராளிகளை கண்டுபிடித்து அவர்களை அழிப்போம்" என்றார். அதன்படியே மக்கள் தங்கள் எதிராளிகளை முற்றிலுமாக முறியடிக்கும் வரையிலும் சூரியன் மறையாமல் நின்றது. சந்திரனும் அப்படியே நின்றது. இந்த சம்பவத்திற்கு பின்பு பகைவர்கள் இவர்களுக்கு எதிராக படையெடுத்து வரவேண்டும் என்ற எண்ணத்தையே விட்டு விட்டார்கள். இப்படியாக கர்த்தர் ஒரு மனிதனுடைய வார்த்தையை கனம் பண்ணி அவனை உயர்த்தினார். அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னும் பின்னும் இல்லை. கர்த்தரே இஸ்ரவேலருக்காக யுத்தம் பண்ணினார்
ஒரு மனிதன் தேவனோடு இருக்கும் போது அவனுக்காக அவர் யுத்தம் பண்ணுகிறார். " அவர் சொல்ல ஆகும், அவர் கட்டளையிட நிற்கும்" - (சங் 33 :9)
சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைகலமானவர். அவர் பூமியின் கடை முனை மட்டும் யுத்தங்களை ஓயப் பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார். ரதங்களை நெருப்பினால் சுட்டேரிக்கிறார், நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள். ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன் - (சங் 46: 7-10)
என்று வேதம் சொல்லுகிறது.
தேவன் நம்மை இர்ட்சிக்கும்படி மிகவும் பிரியமாய் இருக்கிறார். இரட்சிப்பு என்றால் காப்பற்றப்படுதல் அல்லது விடுவிக்கப்படுதல். நாம் விடுதலை பெரும்படியாக இயேசு கிறிஸ்து சாத்தானோடு யுத்தம் செய்து வெற்றி பெற்றிருக்கிறார். இந்த இயேசுவின் மேல் நம்பிக்கை வைக்கும் போது, ஏற்றுகொல்லும்போது, நன்முடைய பாவத்தின் அடிமை தனத்திநின்று நம்மை விடுவிப்பார். நோய்கள், போராட்டங்கள், போன்றவற்றிலிருந்து விடுதலையளிக்கிறார். நமக்காக அவர் யுத்தம் செய்து நம்முடைய வாழ்க்கையில் யெகோவா நிசியாக இருந்து வெற்றிக்கொடி பிடிப்பார். "கர்த்தரை தங்களுக்கு தெய்வமாக கொண்ட ஜாதியும் அவர் தமக்குச் சுதந்திரமாக தெரிந்து கொண்ட ஜனமும் பாக்கியமுள்ளது" - (சங் - 33: 12)
நமக்காக பரிந்து பேச, யுத்தம் செய்ய ஒரு நபர் கூட இல்லையே என்று ஏங்கதீர்கள். உங்களுக்காகப் பரிந்து பேச ஒரு வழக்குரைஞர் உண்டு. அவர் தான் இயேசு. உங்களுக்காக யுத்தம் செய்ய ஒரு இராணுவ வீரர் உண்டு. அவர் தான் இயேசு. அகவே மனிதனுக்கு பயப்படமால் கர்த்தருக்கு பயந்திருங்கள்.
கர்த்தருடைய நாமத்தினாலே உங்கள் அனைவருக்கும் சமாதானமும் சந்தோஷமும் உண்டாவதாக.
<a href='http://www.tamil10.com' target="_blank" rel="dofollow" > <img src='http://www.tamil10.com/files/newlogo.gif' alt=' Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator '><a href='http://www.tamil10.com' target="_blank" rel="dofollow" > <img src='http://www.tamil10.com/files/newlogo.gif' alt=' Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator '>

No comments:
Post a Comment