05 September 2012

தமிழகத்துக்கு பெருமையா?

தமிழகத்துக்கு பெருமையா?


செய்தி 
                   
                    "தமிழகத்துக்கு வந்த இலங்கை பக்தர்கள் விரட்டியடிப்பு மற்றும் கால் பந்து விளையாட வந்த பள்ளி மாணவர்களும் தமிழக அரசால் திருப்பி அனுப்பப்பட்டனர்"


  கோணம் 

                  தஞ்சாவூர், பூண்டி, வேளாங்கண்ணி மாதா கோயில்களில் வழிபட வந்த பக்தர்களை முற்றுகையிட்டு தாக்க முயன்றுள்ளனர். நாங்களும் தமிழர்கள்தான் 15 வருடங்களாக இந்த கோவிலுக்கு வந்து போய் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னதை கேட்க ஆத்திரகாரர்கள் தயாரில்லை இலங்கைளிருந்து வரும் அனைவரும் சிங்களர்கள், சிங்களர்கள் அனைவரும் எதிரிகள் என்று அவர்கள் நம்புகிறார்கள் தவறான விபரீதமான அந்த எண்ணம் உருவாக யார் காரணம்? 

                   சென்னை பள்ளி ஒன்றின் அழைப்பின் பேரில் இங்கே வந்து கால்பந்து போட்டியில் பங்கேற்க பயிற்சி செய்து கொண்டிருந்த இலங்கை பள்ளிகூட மாணவர்களை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற முதல்வர் உத்தரவிட்டார். இன்னொரு கொழும்பு கல்லூரியில் இருந்து சென்னை வந்து சுங்க அதிகாரிகள் குழுவுடன் கால்பந்து போட்டியில் களமிறங்கிய குழுவை திருப்பி அனுப்ப உந்தரவிட்டார். நேரு ஸ்டேடியத்தில் அவர்கள் விளையாட அனுமதித்த அதிகாரியை சஸ்பென்ட் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்திரவிட்டுளார். எந்த மாநிலமும் பார்த்திராத அதிரடி நடவடிக்கைகள்.

                     அப்பாவி தமிழர்கள் பலியாக காரணமான இலங்கை அரசையும் ராணுவத்தையும் தண்டிக்கும் கோரிக்கையுடன் தொடங்கிய எதிர்ப்பு வேறு திசையில் திரும்பிருக்கிறது. பள்ளி மாணவர்கள், பக்தர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து மக்களையும் எதிரிகளாக பாவித்து, நிராயுதபாணிகளான அவர்களை தாக்கவும் துரத்தி அடிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள். தமிழனின் வீரத்தை உலகுக்கு உணர்த்த சரியான சந்தர்ப்பம் வந்து விட்டது என்று கட்சி கொடிகளையும் கற்களையும் கைகளிலேந்தி வீதியில் இறங்கிவிட்டார்கள்.

                      இந்தியாவில் நாசவேலைகள் செய்து அப்பாவிகளை பலியாக்கும் பாகிஸ்தான், இந்திய மண்ணில் கணிசமான பகுதியையை ஆக்கிரமித்துள்ள சீனா போன்ற நாடுகளின் பிரஜைகளுக்குகூட இத்தகைய வரவேற்பு கொடுப்பதில்லை. அரசின் செயல்களுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் சம்பந்தம் இருப்பதில்லை. அந்த விஷயத்தில் நம்மை போன்றுதான் இதர நாடுகளும், அதே மாதிரி ஒரு அநீதி இன்னொரு அநீதியை நியாயமாக்கி விடாது. சம்பந்தப்பட்டவர்கள் இந்த உண்மைகளை அறிந்து அலட்சியப் படுத்தினால் நமது நாடு பெரிய விலை கொடுக்க நேரிடும். 

                                                                                                                             --  நன்றி: தினகரன் 

என் எண்ணம்  
          
                       வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு இன்று விரட்டியடிக்கும் நாடக மாறியிருக்கிறது காரணம் நம் தமிழ்மக்கள் அங்கு சித்திரவதை பட்டுகொண்டிருக்கும் போது அந்த நாட்டை சார்ந்த மக்கள் இங்கு வந்து போவதை நம்மால் தங்கிக்கொள்ள முடியவில்லை. மக்களின் உணர்ச்சி கலந்த நிலையில் பார்க்கும் போது இது சரியாக தோன்றலாம் அனால், மனித நேயத்துடன் பார்க்கும் போது இது தவறான போக்காகும். நம் தமிழ் நாட்டை சார்ந்த எந்தனையோ வியாபாரிகள் அங்கே சென்று வியாபாரம் செய்து வருகிறார்கள். நம்மை போன்று அவர்களும் நம்மவர்களை தாக்க தொடங்கினால் என்னாவது என்பதை புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு வேண்டும். அமெரிக்கா போன்ற மேலை நாடுகளுக்கு செல்லும் நம் நாட்டு தலைவர்கள் பாதுகாப்பு சோதனை என்ற பெயரில் அவமதிக்கப் படுகிறார்கள் அப்போது நாம் கண்டன கணைகளை விட்டு அதோடு மறந்து விடுகிறோம். அந்த நாட்டு மக்களை நாம் எதுவும் செய்யவில்லை, அதேபோல் ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்து எட்டு இந்தியர்கள் கொள்ளப்பட்டு விட்ட போதும் அந்த நாட்டுடன் நாம் சண்டை போடமால் கண்டனம் தெரிவித்து விட்டுவிட்டோம். இது போன்ற விஷயங்களில் உணர்ச்சிகளை வெளி காட்டமால்  மனிதபிமனாத்துடன் நடந்துகொள்ள வேண்டும். இலங்கையில் தமிழர்கள் இன்னமும் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டு சித்திரவதை பட்டு கொண்டிருக்கிறார்கள் அவர்களுடைய பாதுகாப்பும் இதில் அடங்கிருக்கிறது. அதலால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து அரசாங்கமும் இது போன்ற செயல்களை உக்குவிக்கமால் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் ஒன்று படுவோம் தமிழீழம் கிடக்க பாடுபடுவோம். 

No comments:

Post a Comment