01 September 2012

பாக்கியம் தரும் பரமனின் பரீட்சை

வழி காட்டும் கிறிஸ்துவம் 




பாக்கியம் தரும் பரமனின் பரீட்சை 

                  ஊத்ஸ் என்ற நாட்டில் யோபு என்னும் ஒரு பெரிய பணக்காரன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பத்து பிள்ளைகள், ஏழாயிரம் ஆடுகள், மூவாயிரம் ஒட்டகங்கள், ஐந்நூறு ஏர்மாடுகள், ஐந்நூறு கழுதைகள், மற்றும் திரளான வேலையாட்கள் இருந்தார்கள். ஆனாலும் அவர் உத்தமனனாய், தேவனுக்கு பயந்து பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாய் இருந்தான். தேவன் அவனையும் அவனுக்குண்டான எல்லாவற்றையும் பாதுகாத்து வந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் யோபுவினுடைய வாழ்க்கையில் புயல் காற்று 
வீசியது. காரணம் யார் தெரியுமா? பொறாமையின் எஜெண்டாகிய பிசாசுதான். ஆம், ஒரு நாள் பிசாசு தேவனிடம் வந்து அவனுக்குண்டான எல்லாவற்றையும் அழிக்கும்படி அனுமதி கேட்டான். எப்படிபட்ட சூழ்நிலை வந்தாலும் யோபு தன்னை மறுதலிக்க மாட்டான் என்று தேவன் அறிந்த படியால் சவால் விட்டு அனுமதி வழங்கினார்.

                    உடனே யோபுவின் பிள்ளைகள், ஆடுகள், ஒட்டகங்கள், ஏர் மாடுகள், கழுதைகள், வேலைக்காரர்கள் என அடுத்தடுத்து எல்லாம் அழிந்து போய்விட்டது. யோபு கொஞ்சமும் கலங்கவில்லை. "கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார், கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்" என்று சொல்லி அவர் புகழ் பாடினான். பின்னும் ஒருநாள் சாத்தான் தேவனிடத்தில் வந்து "நீர் உம்முடைய கையை நீட்டி அவன் எலும்பையும் அவன் மம்சத்தையும் தொடுவீரானால் அவன் உம்மை தூஷிப்பான், குறை சொல்லுவான்" என்றான் தேவனும் "அவன் உயிரை பறிக்க உனக்கு அதிகாரமில்லை: ஆனால் அவன் சரீரத்தை நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். அவன் என்னை மறுதலிக்க மாட்டான்" என்று சவால் விட்டார்.
                      உடனே சாத்தான், யோபுவுக்கு உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலை வரை கொடிய பருக்கள் கொண்டு வந்தான். யோபு என்ன நடக்கிறது என்று அறியாமல் ஒரு ஓட்டை எடுத்து தன்னை சுரண்டிகொண்டே சாம்பலில் உட்கர்ந்திதிருந்தான். இதை பார்த்த யோபுவின் மனைவி தேவனை தூஷித்து ஜீவனை விடும் படி ஆலோசனை கூறினால்.

                       யோபு தன் மனைவியை பார்த்து "தேவன் கையிலே நன்மையை பெற்ற நாம், தீமையையும் பெற வேண்டாமா?" என்றான். ஒருபுறம் மனைவியின் வார்த்தைகள், இன்னொரு புறம் தன் நண்பர்களின் கேலி பேச்சுகள், இவை மதத்திலும் யோபு தேவனை தூஷிக்கவில்லை. மாறாக தன் நண்பர்களுக்காக வேண்டுதல் செய்தார். அப்போது தேவன் யோபுவின் முகத்தை பார்த்தார். அவன் நிலைமையை மாற்றினார். அவனுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாக திருப்பிக் கொடுத்தார். நாலு தலைமுறையாக தன் பிள்ளைகளையும், அவர்களுடைய வம்சவாழியினர் வாழ்வையும் கண்டு பூரண வயது நிரம்பியவானாய் சமாதானத்தோடே நித்திரையடைந்தான் யோபு.

                        சோதனைகள் அதாவது பரீட்ச்சைகள், நம்மை புடம் போடவே, நம்மை உயர்த்தவே இறைவனால் அளிக்கப்படுகின்றன. வாழ்கைப் பரீட்சையில் வெற்றி பெற தேவனை சர்ந்துகொள்வோம். குறை கூறாதிருபோம். இப்படி இருந்தால், நம்மைக் குறித்து தேவன் பிசாசிடம் சவால் விடுவார். 

                                                                                                   "பரமன்குறிச்சி பெவிஸ்டன்"   



   

No comments:

Post a Comment