13 October 2012

பொறாமை என்னும் பிசாசு

பொறாமை என்னும் பிசாசு 


             கிரேக்க நாட்டில் தியாஜீன்ஸ் என்ற பிரசித்தி பெற்ற மல்யுத்த வீரன் இருந்தான். "மல்யுத்த இளவரசர்" என்ற சிறப்புப் பட்டமும் அவனுக்கு கொடுக்கப்பட்டது. இன்னொரு மல்யுத்த வீரனுக்கு தியாஜீன்ஸ் மீது மிகுந்த பொறமை. திடிரென்று ஒருநாள் தியஜீன்ஸ் மரணமடைந்தான். அப்படியுருந்தும் அவன் குறையவில்லை. ஏனெனில் அந்த ஊர் மக்கள், உயிரோட்டமிக்க தியாஜீனஸின் மிகப்பெரிய சிலையை செய்து பொது இடத்தில் வைத்தார்கள். அதை பார்க்கும் போதெல்லாம் பொறாமைக்கரனுக்கு மேலும் பற்றி கொண்டு வரும். அகவே ஒவொரு நாளும் இரவு வேளையில் அவனது ஆத்திரம் தீர அந்த சிலையோடு மல்யுத்தம் செய்வான். எதிர்த் தாக்குதல் இல்லாததால், தானே ஒவ்வொரு முறையும் வெற்றி பெருவதாகிய கற்பனையில் அவன் மகிழ்வான். அந்த மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. ஒருநாள் அவ்வாறு மல்யுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அந்த சிலை உடைந்து அவன் மீது விழுந்து அவனை நசுக்கி, அவனுக்கு மரணம் சம்பவிக்கச் செய்தது. அவனுடைய பொறாமைக்கு கிடைத்த சம்பளம் மரணமாகி விட்டது. 

               பதான் அராமில் கி.மு. 1746ல் யாக்கோபு ராகேல் பெற்ற குமாரர்களில் யோசேப்பு மூத்தவன். இவனுடைய  நல்ல குணங்கள் காரணமாக, தந்தை யாக்கோபு,  இவன் மேல் மிக அன்பாய் இருந்தான். இதனால் அவனுடைய சகோதரர்கள் இவன் மேல் பொறாமை கொண்டு தோந்தான் நாட்டிலிருந்து வந்த இஸ்ரவேல் வியாபாரிகளுக்கு அவனை விற்று விட்டார்கள். அந்த வியாபாரிகளோ, யோசேப்பை எகிப்தின் பிரதானியான போத்திபாரிடம் விற்றார்கள். யோசேப்பின் சகோதரர்களுடைய பொறாமை, யோசெப்பைதான் எவ்வளவு துன்புறுத்திவிட்டது! ஆனாலும் கர்த்தர் இருந்தார். அதனால் அவன் எகிப்து தேசத்தின் அதிகாரியாய் அனான்.

                பஞ்ச காலம் வந்த போது கானான் தேசத்திலிருந்து தானியம் பெற எகிப்திற்கு யோசேப்பின் சகோதரர்கள் வந்தார்கள். அங்கே யோசேப்பு அதிகாரியாய் இருந்ததை கண்டு தலைகுனிந்தனர். யோசேப்போ அவர்களை எதிர்க்கவில்லை தன்  சகோதரர்களையும், தன் தகப்பனையும் பார்வோனின் அனுமதியுடன் எகிப்தில் ராமசேஸ் என்கிற இடத்தில் குடியமர்த்தி, சுதந்திரம் கொடுத்து ஆதரித்தான்.
  
                பிறரிடம் நல்ல குணங்கள் அல்லது சம்பத்துக்கள் இருப்பதை கண்டு ஒருவர் தன் உள்ளத்தில் எரிச்சலடைந்து அந்த நபர் மீது பொறாமைபடுகிறார். இது இயற்கையான மனித சுபாவம்தான். ஆனாலும் ஒவொருத்தரும் பொறமை என்னும் பாவகுணத்திற்கு எதிராக தங்களை காத்துக்கொள்ள வேண்டும் என தேவன் விரும்புகிறார் "சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன். பொறமையோ எலும்புருக்கி" - ( நீதி 14 : 30 )
                                                                                                                                  நன்றி தினகரன் 

                 

No comments:

Post a Comment